[Tamoul Trag" />
[Tamoul Trag"/>
[Tamoul Trag">

Je Suis Charlie...Nous Sommes Charlie...Nous Sommes Tous Charlie

Views 28

* "Je Suis Charlie...Nous Sommes Charlie...Nous Sommes Tous Charlie"...!!!

[Tamoul Tragédie Musique]

* "பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தீவிரவாதிகள் கொடூரத் துப்பாக்கிச்சூடு 12 பேர் பரிதாப உயிரிழப்பு"...!!!

[07 ஆம் திகதி, புதன்கிழமை, சனவரி மாதம், 2015 ஆம் ஆண்டு - பிரான்ஸ்]

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தீவிரவாதிகள் கொடூரத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரான்சில் வெளியாகிவரும் சார்லி ஹெப்டோ [Charlie Hebdo] ஆன்லைன் வார இதழ் தலைமை அலுவலகம் மீது தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர்.

துப்பாக்கிச்சூட்டை அடுத்து அந்தப் பகுதியை பிரான்ஸ் பொலிஸார் சுற்றி வளைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருதோடு, பாரிய தேடுதல் நடவடிக்கையிலும் பிரான்ஸ் பொலிஸார் இறகியுள்ளனர்.

பிரான்சின் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ [Charlie Hebdo] வார இதழ் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த 2 பேர் நடத்திய கொடூரத் துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

சார்லி ஹெப்டோ [Charlie Hebdo] வார இதழ் தலைமை அலுவலகத்திற்குள் இன்று காலை பிரான்ஸ் நேரப்படி 11:30 மணிக்கு இரண்டு ஆண்கள் நுழைந்து திடீர் எனக் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்திய நபர்கள் கறுப்பு நிறத் தலைப்பாகையுடன் கூடிய முகமூடி அணிந்து வந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

சார்லி ஹெப்டோ [Charlie Hebdo] பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலில், 12 பேர் பரிதாபமாக பலியானார்கள். அவர்களில், பத்திரிகை ஆசிரியர் ஸ்டெபானி சார்போனியர், கேலிச்சித்திரம் வரைபவர்களான சாபு, டிக்னஸ், வோலின்ஸ்கி ஆகியோரும், இரண்டு பொலிஸாரும் அடங்குவர். தாக்குதலுக்குப் பிறகு, துப்பாக்கியால் சுட்டபடியே தீவிரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இதனையடுத்து பாரிஸ் நகர் உட்பட பிரான்ஸ் முழுதும் உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவத்தில் பரிதாபமாக கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் பிரான்சில் தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தங்களது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

* இந்தக் கொடூரத் தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தை பிரான்சில் வாழும் அனைத்துத் தமிழீழத் தமிழ் மக்கள் சார்பில் எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் இந்தக் கொடூரத் தீவிரவாதத் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தவர்கள், மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும் - உறவினர்களுக்கும் - தோழமைகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவத்தில் பரிதாபமாக கொல்லப்பட்டவர்களுக்கு பிரான்சில் வாழும் அனைத்துத் தமிழீழத் தமிழ் மக்கள் சார்பில் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவர்களின் உயிர் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், தோழமைகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

- பா.பாலா

87280 லிமோஸ்

பிரான்ஸ்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS