Seeman Explains His Meeting with Thalaivar Prabhakaran in Eelam - 14 March 2016

Tamil Cat Kanoli 2016-03-19

Views 20

சீமான் உண்மையில் வன்னிக்கு போனாரா?
+++++++++++++++++++++++++++++++++++++++++
தலைவரை சீமான் சந்தித்தாரா?
+++++++++++++++++++++++++++++
சீமானிடம் தான் தலைவர் போராட்டத்தை கையளித்தாரா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தமிழீழ விடுதலை போராட்டத்தில் போராளிகள் இணைந்தவுடன் அடிப்படை பயிற்சி நிறைவு செய்தபின் அவர்களது திறமைக்கு ஏற்றது போல ஒவ்வொரு துறைக்கும் பிரித்து அனுப்பப்படுவார்கள். அங்கு சென்றபின் சாதாரண போராளியாகவே இன்னொரு மூத்த போராளியின் கீழ் பணியில் அமர்த்தப்படுவார்.
அதில் இருந்தபடியே தனது பணியை திறம்பட செய்தால் அந்த துறையின் சகபோராளிகள் மத்தியில் இவர் இனம்காணப்படுவார். அதன் பின் இவரது பொறுப்பாளர்களின் கவனத்தை பெறுவார். தொடர்ந்து அவர் தனது சிறப்பான பணியை வெளிக்காட்டும் போது தான் அந்த துறைக்கான பொறுப்பாளரின் கவனத்தை ஈர்ப்பார்.
மேலும் தனது திறமையை வளர்க்கும் போது தான் தலைவரின் கவனத்தை பெற முடியும். இதே போல தலைவரின் கவனத்தை பெற்று சிறு வயதிலேயே அசாத்திய திறமையினால் மட்டு, அம்பாறை மாவட்ட தளபதியாக (கருணாவுக்கு அடுத்த நிலையில் ) விடப்பட்ட தளபதி லெப்.கேணல். ஜோயை கூறமுடியும்.
19வயதில் கிழக்கு பளபதியாக அண்ணை நியமித்ததற்கு முக்கிய காரணம் சிறப்பு திறமையே. ஆனால் இந்தியாவில் பயிற்சி எடுத்த பல போராளிகள் சாதாரண பணியில் பலர் இருந்தனர். இதில் இருந்து ஒன்றை புரிந்து கொள்ள முடியும் திறமைக்கு மட்டுமே புலிகளமைப்பில் முன்னுரிமை வழங்கப்படும். அது பழைய போராளியாக இருந்தாலும் சரி புதிய போராளியாக இருந்தாலும் சரி அதன் படியே பொறுப்புகள் வழங்கப்பட்டன.




சீமான் வன்னி சென்றாரா? தலைவரை சந்தித்தாரா?
***********************************************************************
இந்த கேள்விகளுக்கு முகநூல் போராளிகள் தங்களது விருப்பத்திற்கு (பக்கத்தில நின்று வந்தவை போல) பல ஆய்வுகளை மேற்கொள்ளினம். இந்த போராட்டத்திற்கும் அவைக்கும் சம்பந்தமே இருக்காது.
அல்லது 2009 வரை எல்லாத்தையும் மூடிக்கொண்டிருந்த, ஆரம்பத்தில் இயக்கம் கலைத்துவிட்ட, இயக்கத்தை விட்டு சண்டைக்கு பயந்து இயக்கத்தை விட்டு ஓடிவந்தவை, அல்லது பேருக்கு ஒரு டம்மி பீசா சுத்தி திரிஞ்சதுகள் தான். இப்போது நாங்கள் பழைய போராளிகள் எங்களுக்கு “கனக்க தெரியுமென்று அவையளே” தங்களை, தாங்களே சொல்லிக்கொண்டு முகனூலிலை திரியினம்.
அவை சொல்லுற ஒரு விளக்கம் வைகோ மட்டும் தான் புலிகளின் ஆதரவாளராம். உண்மையில் இதை கூறுபவர்களுக்கு முள்ளிவாய்காலில் கடைசியில் நடந்தது தெரியாது. நானும் ஒத்துக் கொள்ளுறன் வைகோ எங்களுக்கு உதவினவர் தான். அதை என்றைக்கும் ஈழத்தமிழர் மறக்க மாட்டினம்.
அனால் அவர் மட்டுமா உதவினார் என்றால் இல்லை.
தமிழ் நாட்டில் புலிகளுக்கு உதவினவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. அவர்களையும் நாங்கள் மறக்கேல்லை. அவர்கள் தங்களை விளம்பரப்படுத்தவும் இல்லை.
சீமான் வன்னி வந்ததும் உண்மை. நடேண்ணை,ரஞ்சித்தண்ணை போன்றவர்களுடன் திரிந்ததும் உண்மை. இது அந்த நேரத்தில் அங்கு இருந்த போராளிகளுக்கு தெரியும். அப்படி இதை யாரவது, தானும் போராளி என்ற அடையாளத்துடன் மறுப்பானாகில் அவன் அந்த நேரத்தில் அங்கு இருக்காத ஒரு பொய்யன் அல்லது புளுகன் தயவு இவர்கள் போன்றவர்களை நம்பவேண்டாம்.




தலைவரின் சூட்டு பயிற்சி.!
****************************************
இதில் என்ன வேடிக்கை உள்ளது ? நெடுமாறன் ஐயா, ராமகிட்டிணன் அண்ணை, கொளத்தூர் மணியண்ணை போன்றவர்கள் வந்தபோது இவர்களுக்கும் அண்ணை துப்பாக்கியை சுடுவதற்கு கற்பித்தார். அவர்களுடன் நேரத்தை செலவழித்தார். அது போலவே இதுவும்.
அது தலைவரின் தனித்துவமான ஒரு செயல்பாடு. இதனால் அந்த தலைவர்களுக்கு எங்கள் போராட்டத்தின் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும். இது ஒரு உளவியல் போர் முறை. இதை தான் பின்னைய நாட்களில் போது பாடசாலை சிறுவர் தொடங்கி முதியவர் வரை ஆயுதங்கள் அவர்களிடம் கையாள அனுமதிக்கப்பட்டது.
அது போலாவே திரு.சீமானுக்கும் வழங்கப்பட்டது. தலைவரின் நிழல் கடாபி அண்ணை என்பது உலகத்துக்கே தெரியும். அவர் இல்லாது அண்ணை எங்கும் செல்வதில்லை. அந்த இடத்தில் அவர் நின்றதும் வியப்பில்லை. பயிற்சி கொடுத்ததிலும் வியப்பில்லை.
அடுத்தது தலைவருடன் நிற்கும் புகைப்படம் பொய்யென்பது சில முட்டாள்களின் கருத்து.
**************************************************************************************************************************
அந்த படத்தை பார்க்கும் போது தெரியவில்லையாட உங்களுக்கு? அந்த படத்தை எடுக்கும் போது நின்ற போராளிகள் இப்போதும் சாட்சியாக இருக்கின்றார்கள்.
அண்ணையுடன் திரு.சீமான் சில நிமிடங்களே செலவழித்தார் என்பதும் வடி கட்டிய பொய்யே. தலைவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருக்கு கொடுக்கப்பட்ட பணி பற்றி அடிக்கடி கூப்பிட்டு உரையாற்றுவார்.
அதற்கும் பல போராளிகள் (உண்மையான கடைசிவரை முள்ளிவாய்காலில் நின்று வந்த போராளிகள்) சாட்சிகளாக இருக்கின்றார்கள்.




அடுத்தது சூசை (SO)அண்ணையின் இறுதி உரையாடல் பொய்யா?
******************************************************************************************
சூசை (SO)அண்ணை அவரது மரணத்திற்கு இறுதி நாளில் சந்தோசுடன் உரையாடிய ஒலி நாடா. இதையும் போலி என்று சில பக்கியல் சொல்லினம். அப்படி சொல்பவர்கள் ஒன்றில் அமைப்பில் இருக்காதவர்களாக இருக்கமுடியாது. அல்லது SOஅண்ணையை பார்த்தோ அல்லது அவரது குரலை கேட்காதவர்களாகத்தான் இருக்க முடியும்.!
சூசை அண்ணை ஏன் இதற்கு முன் உதவிய பழைய தலைவர்களை விட்டுவிட்டு “சீமானிடம் சொல்லு அவரை நம்பித்தான் விட்டுவிட்டு போகின்றோம்” என்று கூறினார்?
ஏன் இதை உங்களால் நம்பமுடியாமல் போனது?
காரணம் எங்களுக்கு தெரிந்த ஈழ அபிமானிகள் அண்ணன் வைகோ, ஐயா ராமதாஸ் அண்ணன் திருமாவளவன், நெடுமாறன் ஐயா போன்றவர்கள் மட்டுமே இருந்தனர். இறுதியில் தான் சீமான் உள்வாங்கப்பட்டார். மேலும் படிக்க - http://tamilcat.com/did-seeman-meet-thalaivar-prabhakaran-march-2016/

Share This Video


Download

  
Report form