சென்னை: என்னை நக்ஸலைட் என்று சொன்னபோது கோபம் வரவில்லை சிரிப்புத்தான் வந்தது என குண்டர் சட்டத்தில் கைதாகி, விடுதலையான வளர்மதி ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறினார்.
நெடுவாசலில் ஹைட்ரோ திட்டத்தை எதிர்த்து போராடுவதற்காக, சேலம் அரசு மகளிர் கல்லூரியில் நோட்டீஸ் விநியோகம் செய்ததற்காக குண்டர் சட்டத்தில் கைது மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். பிறகு நீதிமன்றம் அவர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை நீக்கியது. நக்ஸலைட் என்று சொல்லப்பட்ட மாணவி வளர்மதி ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
நம்மில் பலர் மாவோயிஸ்ட், நக்ஸலைட் என்ற வார்த்தைகளை தெரிந்திருக்கிறோம். ஆனால், யார் இவர்கள்? இவர்கள் என்ன செய்கிறார்கள்? நல்லவர்களா, கெட்டவர்களா என்கிற புரிதல் இல்லை.
நக்ஸலைட், மாவோயிஸ்ட் என்றால் மிகப் பெரிய பயங்கரவாதிகள்,மக்களுக்கு தீங்கு செய்கிறவர்கள் என்ற கருத்தை அரசு மக்கள் அனைவரிடத்திலும் விதைத்துவிட்டது. ஆனால் அரசு சொல்வது உண்மையா பொய்யா என்பதை தெரிந்துகொள்ளவாவது யார் இவர்கள் என தெரிந்துகொள்வது அவசியம்.
Valarmathi who has been arrested under Gundas act and released have given special interview to Oneindia. She shared her experience about Maoist.