சீமான் பற்றிய இன்றைய செய்தி-இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் இருந்து இயக்குனர் சீமான், அமீரை விடுவித்து ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழ் திரையலகம் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர் சீமான், அமீர் மீது கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை பின்னர் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் நேரில் ஆஜராகி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இயக்குனர் சீமான், அமீர் இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து ராமேஸ்வரம் முதன்மை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Rameswaram court released Director Ameer and Seeman from the cases registered against them for speak against Indian sovereignty