நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய உலக சாதனை படைத்தார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா 1-1 என சமநிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, வரும் 29ல் கான்பூரில் நடக்கிறது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில், முன்னாள் இந்திய கேப்டன் தோனி, இரண்டு கேட்ச் பிடித்தார். இதன் முதல் கேட்ச் பிடித்த போது, சர்வதேச அளவில் இந்திய மண்ணில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.இதுவரை 308 போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி, இந்திய மண்ணில் மட்டும் நடந்த போட்டிகளில் மட்டும் 201 கேட்ச்களை பிடித்துள்ளார்
ms dhoni wrote his name on a new record in the 2nd odi against new zealand