நடிகை அமலாபால் போலி முகவரி கொடுத்து கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளவர் அமலாபால். இயக்குநர் விஜயுடன் திருமணம் நடைபெற்ற பிறகு விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் சினிமாத்துறையில் ஒரு ரவுண்ட் வர முயன்று கொண்டுள்ளார். இதற்காக கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து வருகிறார் அமலாபால். ஆகஸ்ட் 4ம் தேதி, சென்னையில் அமலாபால் பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் வகை சொகுசு கார் வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.1.12 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த காரை ஆகஸ்ட் 9ம் தேதி புதுச்சேரியில் அமலாபால் பதிவு செய்துள்ளார். இதற்காக, திலாஸ்பேட் பகுதியில் செயின்ட் ரெர்சா'ஸ் தெரு என்ற முகவரியில் வீடு இருப்பதை போல போலி முகவரி கொடுத்து கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Vehicles plying with Puducherry registration have come under the scanner. Amala Paul’s Benz car has been found to be registered in Puducherry under a fake address.
Essence 2 by Audionautix is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/by/4.0/)
Artist: http://audionautix.com/