2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு காரணமான பேய் மழை திரும்பவும் வருமா என்ற கேள்விக்கு சென்னை வானிலை ஆய்வு மைய ஓய்வு பெற்ற இயக்குநர் ரமணன் பதில் அளித்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரமணன் பங்கேற்றார். அப்போது, மக்களுடன் தொலைபேசியில் அவர் பேசி சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். பெரும்பாலான சென்னை மக்களின் கேள்வி, 2015ம் ஆண்டை போல வெள்ள சேதம் ஏற்படுமோ, அந்த அளவுக்கு இந்த ஆண்டு மழை இருக்குமோ என்பதுதான். அந்த அளவுக்கு முதல் மழையிலேயே மக்கள் அச்சத்தில் உள்ளதை கேள்விகளின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது.இதுகுறித்து ரமணன் கூறியது இதுதான்: வடகிழக்கு பருவமழையின் ஆரம்பமே சிறப்பாக அமைந்துவிட்டது. இந்த வருடம் சிறப்பான மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 2015ம் ஆண்டு அளவுக்கு மழை இருக்கமா என்பதை இப்போதே கூற முடியாது. ஆனால் கடந்த வருடத்தை போல குறைவாக இருக்காது.கடந்த ஆண்டு மழை பொழிவு குறைவாக இருந்ததால் பல இடங்களில் வறட்சி ஏற்பட்டது. நிச்சயம் அதுபோன்ற சூழ்நிலை இப்போது ஏற்படாது என்பதை மட்டும் என்னால் உறுதியோடு கூற முடியும்.
Will the 2015 like rain and flood repeat this year in Chennai, here is the answer from Ramanan.