திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் | Oneindia Tamil

Oneindia Tamil 2017-11-01

Views 327

திமுக தலைவர் மு.கருணாநிதி நூறாண்டுக்கு மேல் வாழ வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்தியுள்ளார். தம்மை கருணாநிதி புன்சிரிப்புடன் வரவேற்றார் எனவும் அவரை சந்தித்தபின் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஓராண்டாக முதுமை மற்றும் உடல்நிலை குறைவால் தீவிர அரசியலில் இருந்து கருணாநிதி ஒதுங்கி இருந்தார். கடந்த சில வாரங்களாக அவரது முரசொலி அலுவலகம், பேரன் திருமணம் என்று உற்சாகமாக வெளியில் வந்து தொண்டர்களுக்கு புது தெம்பை கொடுத்து வருகிறார் கருணாநிதி.
இந்த நிலையில் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்றார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.ராமதாசுடன் பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது ராசாத்தி அம்மாளும் உடனிருந்தார்.

Pattali Makkal Katchi founder Dr Ramadoss met DMK President Karunanidhi at Gopalapuram, Chennai. Ramadoss posted meeting video.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS