வங்கக்கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னையில் மிக கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது. தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுபாகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Chennai meteorological center says heavy rain will continue in Chennai. Tamil Nadu north coastal districts will get heavy rain in next 24 hours due to low depression in bay of bengal said Chennai meteorological center.