கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை நகரமே தண்ணீரில் தத்தளித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சென்னை நகரில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலை தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் கடைகள் என்று அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலன கடைகள் கனமழையின் காரணமாக அடைக்கப்பட்டுள்ளன. மழையினால் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒருசில தனியார் நிறுவங்கள் மழையினால் விடுமுறை அளித்துள்ளது.
சென்னை நகரின் அனைத்து சாலைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தினர் முக்கிய சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மற்ற இடங்களில் தண்ணீர் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட வில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் தண்ணீரை வெளியேற்ற அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப் படுகிறது. மழையினால் நகரில் பெரும்பாலான சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
Dis : Due to the atmospheric overlay cycle, rains have been continuing for the past three days in Chennai city. The rain started yesterday evening