இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி-20 போட்டி நடக்கும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தை, ரூ.5 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர். அதேபோல் நியூசிக்கு எதிரான தொடரை வெல்வதை கோஹ்லி அண்ட் கோ என்ஷூர் செய்ய உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டித் தொடர்களில் விளையாட வந்துள்ளது. முதலில் நடந்த ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று இந்தியா வென்றது. அடுத்ததாக துவங்கிய டி-20 போட்டித் தொடரில், டெல்லியில் நடந்த ஆட்டத்தில் வென்று 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 5 டி-20 போட்டிகள் அனைத்திலும் நியூசிலாந்து அணியே வென்று அசைக்க முடியாத அணியாக இருந்தது. டெல்லி போட்டியில் வென்று, அந்த மோசமான சாதனையை இந்தியா முறியடித்தது
india vs new zealand 2nd t20, new zealand won the toss and choose to bat first. new zealand fixed 197 target for india.