தினமும் காலை இரண்டு மணி நேரம் யோகா. எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும் யோகாவைத் தவறவிட மாட்டார். பிறகு, நண்பர்களுடன் சந்திப்பு. தொடர்ந்து படிப்பு... படிப்பு... படிப்பு. புத்தகத்தில் முக்கியமான கருத்துகளை அடிக்கோடிடுவார். காலத்துக்கும் அந்தப் புத்தகம் மனதில் பதித்த கருத்துகளை மறக்க மாட்டார். தினமும் மாலை மூன்று மணி நேரம் ஜிம்மில் பழியாகக் கிடப்பார். திருமண வரவேற்பு, மற்ற நிகழ்ச்சிகளில் கடைசியாக வந்து கலந்துகொண்டு வாழ்த்த இதுவே காரணம். வெளிநாடு, வெளியூர் என எங்கு சென்றாலும் அவருடைய உடற்பயிற்சியாளர் சூரிக்கும் ஒரு டிக்கெட் உண்டு. கமலுக்கு பிடிக்காத ஒரு விஷயம் பொய் சொல்வது. பொய் சொல்பவர்களை பக்கத்தில் அண்ட விட மாட்டார். பேசும்போது எச்சில் முழுங்கிக்கொண்டு பேசுவதை கண்டுபிடித்துவிட்டால் அந்த நபருடன் அதன் பிறகு பேசமாட்டார்.
A compilation of Kamal Haasan's personal pages.