கட்சிப் பெயர், கொடி, தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம்...! - கமல் ஹாஸனின் அரசியல் மூவ்

Filmibeat Tamil 2017-11-07

Views 4.1K

நடிகர் கமல் ஹாஸன் தனது 63வது பிறந்த நாளையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்த செயலிக்கு மய்யம்விசில் #maiamwhistle என்று பெயர் வைத்திருக்கிறோம். விசில் ஒரு பெரிய ஆயுதம்தான். உலகெங்கும் அநியாயத்தை எதிர்த்து விசில் எழுப்புவர்களை விசில் புளோயர் என்கிறோம். மையம் விசில் இப்போது சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. அதன் பீட்டா வெர்ஷன் தயாராக உள்ளது. முழுமையாகத் தயாராக ஜனவரி ஆகும். அதற்குள் புதிய இணைப்புகள், சேவை வழிகளை சேர்க்க வேண்டியுள்ளது," என்றார் கமல் ஹாஸன். அரசியலுக்கு வருவதில் மும்முரமாகிவிட்ட நடிகர் கமல் ஹாஸன் விரைவில் கட்சியின் பெயர், கொடியை அறிவிக்கப் போவதாகவும், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசியலில் ஈடுபடுவதில் இரு வேறு கருத்தில்லை. நான் பின்வாங்கப் போவதுமில்லை.

Actor Kamal Haasan says that his new pp Maiam Whistle will be comes to use in January. kamal haasan, politics, birthday, கமல் ஹாஸன், அரசியல், பிறந்த நாள்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS