ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு குட் பை சொன்ன நாள் இன்று...வீடியோ

Oneindia Tamil 2017-11-08

Views 1

கடந்த ஆண்டு இதே நாளன்று மத்திய அரசு ரூபாய் நோட்டு பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் சிறு குறு வியாபாரிகள் மட்டும் இன்றி தங்களும் பாதிப்பிற்குள்ளானதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதனால் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களிடம் இருந்த 500 1000 ரூபாய் நோட்டுகளை என்ன செய்வது என்று தெரியாமல் வைத்துக்கொண்டு விழிக்கத் தொடங்கினர். பணமதிப்பு இழப்பால் நாட்டில் பெரும்பாலோனோர் பாதிக்கப்பட்டனர். கருப்பு பணத்தை ஒழிக்கவும் கள்ள நோட்டுகளை தடுக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. பணமதிப்பு இழப்பால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகளும் பொதுமக்களும் தெரிவித்தனர்.

பணமதிப்பு இழப்புக்கு நாளாக இன்று அனுசரித்து எதிர்கட்சியினர் இன்று ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் திமுக கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு மாவட்டங்களில் இன்று ஆர்பாட்டம் நடத்தினர்.


Dis : On the same day last year, the central government accused the public that the small money laundering victims were not affected by the loss of their cash bill

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS