சின்னம்மா"வைப் பார்த்து விட்டுத் திரும்பிய தினகரனை வரவேற்ற ஐடி!- வீடியோ

Oneindia Tamil 2017-11-09

Views 2

சசிகலாவை பார்க்க டிடிவி தினகரன் பெங்களூரு சென்று விட்டு நள்ளிரவில் சென்னை திரும்பிய நிலையில் இன்று அதிகாலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கணவர் நடராஜனை பார்க்க கடந்த மாதம் சசிகலா 5 நாட்கள் பரோலில் சென்னை வந்து விட்டு மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார். அதன்பிறகு அவரை உறவினர்கள் யாரும் சந்திக்கவில்லை
இந்நிலையில்,நேற்று பிற்பகல் தனது மனைவி மகளுடன் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்து விட்டு நள்ளிரவில் வீடு திரும்பினார் தினகரன். இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக மேற்கொண்டு வருகின்றனர்.

IT officials are raiding Dinakaran's house in Chennai as he is staying in Bangalore.Income Tax Dept Raid is being conducted in more than 100 places related to Sasikala and her family

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS