ஐடி ரெய்டுக்கு நடுவே அசால்ட்டடாக கோ பூஜை செய்த டிடிவி தினகரன்!- வீடியோ

Oneindia Tamil 2017-11-09

Views 4

வருமான வரித்துறை சோதனைகளுக்கு நடுவே டிடிவி தினகரன் கோ பூஜை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா குடும்பத்தினர், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகளில் காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 190க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மெகா சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பாஜக அரசின் அடக்குமுறை என விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

சென்னை பெசன்ட்நகரில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் குழு வீட்டிற்குள் சோதனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் டிடிவி தினகரைன் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டிற்கு வெளியே கோ பூஜை நடத்தினார். டிடிவி தினகரன் மற்றும் அவரது மனைவி அனுராதாவும் எந்த பதட்டமும் இல்லாமல் பசுவையும் கன்றையும் வைத்து கோ பூஜை நடத்தினர்.

TTV Dinakaran did ko madha pooja with his family in Besant nagar house. IT officials raiding at his home.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS