தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் தினகரன் தரப்பு அடுத்தடுத்து குடைச்சல் கொடுத்து நெருக்கடியை ஏற்படுத்திய கோபத்தில்தான் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியுள்ளது. சசிகலா குடும்பம் தொடர்புடைய அனைத்து வர்த்தக தொடர்புகளிலும் ஒரே நேரத்தில் கால் நுழைத்திருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். கார்டன் கணக்கு வழக்குகளில் சசிகலா குடும்பத்துக்கு மட்டும் 1 லட்சம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கின்றன. இதற்கு மேலும் அ.தி.மு.கவுக்குள் குழப்படி ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதால் டெல்லி உத்தரவின்பேரில் ஐ.டி நுழைந்திருக்கிறது என்கின்றனர் அதிகாரிகள்.சென்னை நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் கடந்த சில நாட்களாகவே ரகசிய கூட்டங்கள் நடந்து வந்தன. இந்தக் கூட்டம் குறித்த தகவல்களை மேலிட அதிகாரிகள் வெகுரகசியமாகவே பாதுகாத்து வந்தனர்.
According to the sources Delhi has warned to the Sasikala family before they conducted IT Raids.