இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி கொல்கத்தா வந்தடைந்தது
இந்திய அணி ஆஸ்திரேலிய நியூசிலாந்தை தொடர்ந்து அடுத்து இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் பங்கேற்க உள்ளது.
தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 6 வார கால சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தடைந்தது. இந்தியாவுடன் 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்திலும் (நவ.11, 12-ந்தேதி) விளையாட உள்ளது.
கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள இலங்கை வீரர்கள் இன்று பிற்பகலுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.
Sri Lanka cricket team came to India for test series against india