வெங்கட் பிரபு தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஆர்.கே.நகர்’. இதில் வைபவ், சானா அல்தாப், இனிகோ பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சரவண ராஜன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில், ‘நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுவிடுவாங்களா?; நீ என்ன எம்.ஜி.ஆரா? என ஒரு வசனம் வருகிறது.
இந்த வசனம் கமலை விமர்சிப்பது போல் உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் ‘கயல்’ பட நாயகன் சந்திரன் நேரடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் ‘உங்களிடம் நான் இதனை எதிர்பார்க்கவில்லை என ட்வீட் செய்துள்ளார்.
நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது குறித்து அறிவித்துள்ளனர். ரஜினி அரசியலுக்கு வருவார் என சில ஆண்டுகளாகவே கூறப்பட்டு வரும் நிலையில் இன்னும் சரியான முடிவை எடுக்கவில்லை. ஆனால், கமல் அரசியலுக்கு வருவதென நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.
நேற்று தான் ஆர்.கே.நகர் டீசரும் வெளியானது. இதனால், சமூக வலைத்தளத்தில் இப்படத்தை பற்றி பலரும் பேசி வருகின்றனர்.
For More News Visit:-
http://www.maalaimalar.com/