ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 % லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 173 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி 50 பொருட்களுக்கு மட்டும் இனி 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவஹாத்தியில் நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு உள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது.ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார மந்தநிலையும் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
The GST Council on Friday decided to keep only 50 items, mostly demerit, sin and luxury goods in top 28% bracket. As per reports, the Council today decided to lower rates of 173 items in the highest tax slab of 28%.