விளம்பரத்தில் நடிக்கும் ஜூலி- வீடியோ

Filmibeat Tamil 2017-11-10

Views 3.4K

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மத்திய மாநில அரசுகளை விமர்சித்து அனைத்து மீடியாக்களையும் தன் பக்கம் திருப்பியவர் ஜூலியானா. இதைத் தொடர்ந்து அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் டிவி வாய்ப்பு தந்தது. ஆரம்பத்தில் ஜூலியை காயத்ரியும், ஆரத்தியும் வறுத்தெடுத்தபோது பார்வையாளர்களுக்கு அவர்கள் மீது கடுப்பை ஏற்படுத்தியது. இன்னு்ம சொல்ல போனால் ஜூலியால் தான் டிஆர்பி ரேட்டே எகிறியது என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஜூலி ஆதரவு இருந்தது. ஆனால் தற்போதோ நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது. தான் முதல்முதலாக கேமரா முன்தோன்றியுள்ளதாக கூறிய நிலையில் அவர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் குறும்படங்களில் நடித்துள்ளது வெட்ட வெளிச்சமாகியதால் அவரது பொய் தகவலும் அம்பலமானது. ஜூலியின் புளுகுமூட்டை அவிழ்க்கப்பட்டதை தொடர்ந்தும், அவரது முகத்திரையை கமல் கிழித்தெறிந்ததை அடுத்தும் அவர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் ஓவியாவை சீண்டி வரும் ஜூலியை நெட்டிசன்கள் தினமும் வறுத்தெடுக்கின்றனர்.

Actor Cool Suresh is going to produce a film for first time, so he wants to make Bigg boss Juliana as heroine.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS