ஈராக்- ஈரான் எல்லையில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் அங்கு பணி நிமித்தமாக உள்ள இந்தியர்களின் நிலை குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.
ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 350 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஏராளமான பொருள்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 135 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணிகள் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தையொட்டி நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடித்தது போன்ற இந்த நிலநடுக்கத்தின் விளைவுகள் ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
The tremors are attributed to a magnitude 7.2 earthquake that was recorded along the Iran and Iraq border. There will no reports about the Indians.