மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அதிரடியாக நுழைந்து காவல்நிலையத்தை தாக்கி சென்ற சம்வபத்தால் துப்பாக்கி ஏந்திய போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் குன்னூர் அருகே ஆதிவாசி கிராமத்திற்குள் வந்து அவர்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு பின்னர் கேரளா எல்லைப்பகுதியில் உள்ள மஞ்சூர் காவல் நிலையத்தை தாக்கி விட்டு தப்பி சென்றனர். மாவோயிஸ்டுகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு நீலகிரி பகுதி முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன் வாகன சோதனையும் நடத்தினர். திடீரென நடத்தப்பட்ட சோதனையால் மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் நடத்தப்பட்டது அனைத்தும் ஒத்திகை என்பது தெரியவர நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
Dis : The Maoist militants entered the storm and attacked the police station.