இந்தியா-இலங்கை மோதும் முதல் டெஸ்ட் போட்டி மழையால் தாமதம்!- வீடியோ

Oneindia Tamil 2017-11-16

Views 2.8K

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் நடக்கிறது. கொல்கத்தாவில் பெய்து வரும் மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. இந்த போட்டி டிசம்பர் மாத இறுதி வரை நடக்க இருக்கிறது

இலங்கை இந்திய மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியை கூட வென்றதில்லை.எனவே இன்று நடக்கும் போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.
ஆனால் கொல்கத்தா மைதானத்தில் காலையில் இருந்து மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று அங்கு பெய்த மழை காரணமாக நிறைய தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.

First test match between India vs Srilanka held today in Kolkatta. The toss for the match has delayed due to rain in Kolkatta

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS