டப்ஸ்மாஷில் கலக்கிய 'ஜூனியர் நஸ்ரியா' கையில் இப்போ மூணு படம்!- வீடியோ

Filmibeat Tamil 2017-11-17

Views 10.4K

'சீமத்துரை' எனும் படத்தில் புதுமுகம் வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்த 'ஜூனியர் நஸ்ரியா' கலக்கலான டப்ஸ்மாஷ் வீடியோக்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல வழிகளில் முட்டி மோதி ஏங்கித் தவிப்போருக்கு மத்தியில், அடுத்தவர்களை இமிடேட் செய்யும் டப்ஸ்மாஷ் மூலம், படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்று அசத்தி உள்ளார் வர்ஷா பொல்லம்மா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வர்ஷாவுக்கு, தமிழில் பேசவும் எழுதவும் தெரியுமாம். சினிமாவில் நடிப்பது தான் இவரது லட்சியம். ஆனாலும், வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் தான் 'ராஜா ராணி' படத்தில், நஸ்ரியா பேசும் வசனத்தை பேசி அதை வீடியோவாக ரெடி செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதற்கு பயங்கர வரவேற்பு கிடைத்து தென் மாநிலங்கள் முழுவதும் பிரபலமாகி விட்டார். இதன்மூலம், 'சீமத்துரை' உள்ளிட்ட மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது. சீமத்துரை படத்தில் அவருக்கு ஜோடியாக கீதன் நடித்துள்ளார்.

In the film 'Seemaithurai', new comer Varsha bollamma plays the heroine role. This 'Junior Nazriya' from Karnataka is famous for dubsmash videos.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS