மெட்ரோ ரயில் நிலையத்தில் 25 வயது இளம் பெண் பத்திரிகையாளர் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காமிராக்கள் மூலம், இந்த சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி மாறியுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு இச்சம்பவம் மேலும் வலு சேர்க்கிறது.
மத்திய டெல்லியிலுள்ள ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையத்தில்தான் இந்த மோசமான சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது. மெட்ரோ ரயிலின் சுரங்க பாதை பகுதியில் பெண் பத்திரிகையாளர் படிக்கட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பக்கமாக இருந்து வந்த அந்த நபர், பெண்ணின் அந்தரங்க உறுப்பை குறிவைத்து பிடிக்கிறார். முதலில் சற்று தடுமாறிய அந்த பெண், பிறகு அவனது கையை தட்டிவிடுகிறார்.
A 25-year-old journalist, was distrubed by a man at a Metro station in New Delhi on Monday evening, following which the accused was arrested.