ஆட்சியில் தலையிட்ட ஆளுநர் சென்னா ரெட்டியை ஜெயலலிதா எப்படி எதிர்த்தார் தெரியுமா?- வீடியோ

Oneindia Tamil 2017-11-17

Views 61

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவது அவ்வளவு பெரிய விஷயம் ஒன்றுமில்லை என்ற பாணியில் தமிழக அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக அடிக்கடி கூறிக்கொள்ளும், இவர்களோ, அதே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இப்படி ஆட்சியில் தலையிட்ட ஒரு ஆளுநருக்கு எப்படி எதிர்ப்பு காட்டப்பட்டது என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை போலும். கோவையில் அரசு அதிகாரிகளையும் மாவட்ட நிர்வாகத்தையும் அழைத்து ஆய்வுக் கூட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பன்வாரிலால் புரோஹித். 1995ல் மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆனால் அதையும் எளிதில் விடவில்லை ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினார். அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு போகக் கூடாது என்று கடும் உத்தரவும் பிறப்பித்தார்

How former Chief Minister of Tamilnadu Jayalalitha, tackle Governor Chenna Reddy and bring back her authority in history.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS