சசிகலா குடும்ப உறுப்பினர்கள், பினாமிகள் வீடுகளில் நடந்த ரெய்டு மூலம் டிடிவி தினகரன், விவேக் இடையே நடைபெறும் ஈகோ யுத்தம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர சசிகலா குடும்பத்தின் மூத்த தலைவர்கள் பஞ்சாயத்து செய்தும் படியவில்லையாம். இந்த மோதலால் இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ? 30 வருஷம் கட்டிக்காத்த மரியாதை, சம்பாதித்த சொத்துக்களை இழக்கப் போகிறோமே என்று அஞ்சத் தொடங்கியுள்ளனர் சசிகலா குடும்பத்தினர்.
டிடிவி தினகரனுக்கும், விவேக்கிற்கும் இடையே பனிப்போர்தான் ரெய்டுக்கு காரணம் என்று சசிகலா குடும்ப உறவுகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. எனவேதான் பிரிவை மறந்து ஒன்று கூடுங்கள் என்று பேசியுள்ளார் சசி குடும்பத்தின் மூத்த உறுப்பினர்.
In the recent IT raids it has been come to know that the ego war between Dinakaran and Vivek have been exposed