கமல்ஹாசன் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவர்களில் முக்கியமானவர்கள் ஹரிஷ் கல்யானும், ரைசாவும். இருவரும் இணைந்து படத்தில் நடிக்கவிருக்கும் தகவல் முன்பே வெளியானது. பாதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷும், தொடக்கத்திலிருந்தே பிக்பாஸில் பங்குபெற்ற ரைசாவும் இணைந்து நடிக்கும் படத்திற்கு தற்போது 'பியார் பிரேமா காதல்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இளன் இயக்கும் இந்தப் படத்தை கே.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். அவரே இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். ஹரிஷ் கல்யாண் - ரைசா நடிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியிடப்பட்டன. சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் போஸ்ரை யுவன் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.
Biggboss fame Harish Kalyan - Raiza's new film is producing by Yuvan Shankar Raja. The film is directed by Ilan titled as 'Pyaar Prema kaadhal' and the first Look posters are released.