முதல்வர் கூலாக சாமி தரிசனம்- வீடியோ

Oneindia Tamil 2017-11-18

Views 444

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய சென்றது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவு சோதனை மேற்கொண்டனர். ஆனால் ஜெயலலிதாவின் வீட்டில் ரெய்டை கண்டு கொள்ளாத தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்றுள்ளார். அவரை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்ப்பு அளிததுடன் தரிசனமும் செய்துள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் வார்த்தைக்கு வார்த்தை அம்மா ஆட்சி நடைபெறுவதாக கூறி வருகின்றனர். ஆனால் அம்மா வீட்டில் ரெய்டு நடக்கும் போது மீனாட்சியை தரிசனம் செய்ய சென்றது தேவையா என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Dis : When the Income Tax Department officials checked Jayalalitha's Veta House, Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy went to the Meenakshi Amman temple in Madurai and shocked the AIADMK

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS