இன்னும் "குணா" கேரக்டராகவே இருக்காரே கமல்.. ஜெயக்குமார் கிண்டல்!- வீடியோ

Oneindia Tamil 2017-11-20

Views 4

நடிகர் கமல்ஹாசன் இன்னமும் கற்பனையான குணா கதாபாத்திரத்திலேயே வாழ்ந்து வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசு குறித்து கருத்து தெரிவித்தால் அதற்கு முதல் ஆளாக வந்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது அமைச்சர் ஜெயக்குமார்தான். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரெய்டு நடைபெற்றது. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய் என்று குறிப்பிட்டுள்ளார்.

Minister Jayakumar blasts Actor KamalHassan for his twitter comments. He also says that Kamal lives in imaginery world.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS