ரமணா பாணியில் இறந்த சிறுமிக்கு வைத்தியம் பார்த்த மருத்துவமனை- வீடியோ

Oneindia Tamil 2017-11-21

Views 3.8K

டெங்கு காய்ச்சலுக்கு ரூ.15 லட்சம் வசூலித்ததாக வந்த புகாரை அடுத்து டெல்லி போர்ட்டீஸ் மருத்துவமனையில் நடந்தது என்ன என்பது குறித்தும் சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரணை நடத்தப்படும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி, டெல்லியைச் சேர்ந்த ஜெயந்த் சிங்கின் மகள் ஆத்யா சிங் (7) காய்ச்சல் காரணமாக துவாரகாவில் உள்ள ராக்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 4-ஆவது வகை டெங்கு இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப சிறுமியை குருகிராமில் உள்ள போர்டீஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 15 நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை ஜெயந்த் சிங் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 2,700 கை உறை உள்பட டெங்குவுக்காக 15 நாட்களுக்கு ரூ.15 லட்சத்தை கட்டணமாக கொள்ளையடித்துள்ளது போர்ட்டீஸ் மருத்துவமனை. 7 வயது சிறுமிக்கு ஒரு நாளைக்கு 40 சிரிஞ்சுகளில் ரத்த மாதிரிகளை எடுத்துள்ளனர்.அந்த சின்னஞ்சிறிய சிறுமிக்கு மொத்தம் 600 சிரிஞ்சுகளை பயன்படுத்தியுள்ளனர். அதற்கு மருத்துவமனை பில்லில் கட்டணம் போட்டுள்ளனர். மருத்துவமனைக்கு சிறுமி சென்றபோது மயக்கத்தில் இருந்ததால் அவருக்கு ரூ.500 மதிப்பிலான ஆன்ட்டி பாக்ட்டீரியல் மருந்தை செலுத்தினர். அதன்பிறகு, அதே மருந்துக்கு எங்களிடம் கட்டணமாக ரூ.3,100 வசூலித்தனர்.

The Health Ministry on Monday decided to look into allegations that Fortis Memorial Research Institute in Gurugram swindled the family of a seven-year-old dengue patient.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS