ஏமாற்ற முயன்ற இலங்கை வீரர்...டென்ஷன் ஆன கோஹ்லி!-வீடியோ

Oneindia Tamil 2017-11-21

Views 2.5K

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரருக்கும் இந்திய வீரர் ஷமிக்கும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இலங்கை வீரர் நிரோஷன் திக்வெல்லாவின் மோசமான செயலுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியதன் மூலம் இந்திய அணி இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருந்தது. மிகவும் த்ரில்லாக சென்ற இந்த போட்டி தற்போது டிராவில் முடிந்து இருக்கிறது

இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி தோற்கும் நிலைமையில் இருந்தது. ஆனால் இலங்கை வீரர்கள் வெற்றியை பற்றி சிந்திக்காமல் எப்படியாவது போட்டியை டிரா செய்யும் நோக்கில் விளையாடினார். இதையடுத்து இலங்கை வீரர் நிரோஷன் திக்வெல்லா நேரத்தை கடத்துவதற்காக பேட்டிங் பிடிக்காமல் நின்று கொண்டு இருந்தார். மேலும் பந்து போட பாதி தூரம் வந்த பின் பேட்டிங் பிடிக்காமல் பின் வாங்கினார். இதனால் பந்து போட வந்த ஷமி கோவத்தின் உச்சத்திற்கு சென்றார்.

First test match between India vs Srilanka took place in Kolkatta. Niroshan Dickwella's fights with Mohammed Shami and Virat Kohli.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS