கந்து புகாரின் பேரில் அன்பு செழியனை கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை மாவட்ட எஸ்.பி அஸ்ரா கார்க் கைது செய்தார். அவர் மீது பல புகார்கள் இருந்தாலும் அரசியல் பலத்தால் வலம் வந்தார். அன்புசெழியன் கீழ்தரமாக பேசியதாலேயே நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. 2011ஆம் ஆண்டு போல மீண்டும் அன்பு செழியன் மீது நடவடிக்கை பாயுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விரிச்சான்குளத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். சுந்தரா டிராவல்ஸ், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவர் மதுரை மாவட்ட எஸ்பி அஸ்ரா கார்க்கிடம் கடந்த 2011ஆம் ஆண்டு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், "நான் கடந்த 10 வருடங்களாக படதயாரிப்பு தொழில் செய்து வருகிறேன். கடந்த 2004-ல் பட தயாரிப்புக்காக மதுரை தெற்கு மாசிவீதியை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியனிடம் ரூ.20 லட்சம் கடனாக வாங்கினேன்.
Film financier Anbuchezhiyan was arrested in 2011 once when he was charged for Kanthu vatti complaint from Sundara Travels producer Thangaraj.