சசிகுமார் மைத்துனர் தற்கொலை.. திரையுலகினர் இரங்கல்!- வீடியோ

Filmibeat Tamil 2017-11-22

Views 4

கந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், கம்பெனி புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே அவரது உடலுக்கு ஏராளமான திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் சித்தார்த்து, இயக்குநர் கவுதம் மேனன் ஆகியோர் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Cinema artists and Tamilisai soundararajan condolences for the death of Ashok kumar. Actor Sasikumar brother in law Ashok Kumar commit suicide due to usury interest issue.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS