ஆன்லைனில் விமானத்தை வாங்கிய சீன நிறுவனம்...கஸ்டமர் இடத்திற்கே டோர் டெலிவரி செய்யப்பட்டது- வீடியோ

Oneindia Tamil 2017-11-22

Views 4.4K

சீன நிறுவனம் ஒன்று போயிங் ரக விமானத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறது. பல நாட்கள் விற்காமல் இருந்த இந்த விமானம் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த விமானத்தை புக் செய்த நிறுவனத்தின் இடத்திற்கே சென்று நேரடியாக ஷாப்பிங் நிறுவனம் டெலிவரி செய்து இருக்கிறது. இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் மீண்டும் அதே நிறுவனம் இன்னொரு விமானத்தையும் வாங்கி இருக்கிறது.

ஆன்லைன் மூலம் உலகிலேயே இரண்டு விமானங்கள் வாங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் சீனா ஆன்லைன் வர்த்தகத்தில் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது.
சீனாவில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங் 747எஸ் ராக விமானம் இரண்டு பல நாட்களாக பயன்படுத்தபடாமல் இருந்து வந்து இருக்கிறது. கடந்த ஆறு வருடமாக இந்த விமானத்தை பல இடங்களில் விற்பனை செய்ய அந்த நிறுவனம் முயற்சி செய்து இருக்கிறது. இதையடுத்து தென் சீனாவில் உள்ள நீதிமன்றம் இந்த விமானத்தை ஆன்லைனில் விற்கும்படி உத்தரவிட்டது.

Two 747 jets bought through online shopping in china. Chinese online shopping portal Taobao delivered the aero plane to customer place.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS