சிவகார்த்திகேயனுக்கு கேக் ஊட்டிய நயன்தாரா- வீடியோ

Filmibeat Tamil 2017-11-22

Views 63

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள் இன்று. தான் நடிக்கும் எந்தப் படத்தின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா, சமீபகாலமாக தனது நடவடிக்கைகளால் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

சில நாட்களுக்கு முன் 'அறம்' படத்தின் ரசிகர்கள் பல்ஸ் பார்க்க சென்னையில் உள்ள தியேட்டர்களுக்கு விசிட் அடித்த நயன்தாரா, தற்போது 'வேலைக்காரன்' படக்குழுவையும் சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துள்ளார்..மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் 'வேலைக்காரன்'. இந்தப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்ததை அடுத்து, நேற்று பிரிவு உபச்சார விழா கொண்டாடினார்கள் 'வேலைக்காரன்' படக்குழுவினர்.இதில் அதிசயமாக நயன்தாராவும் கலந்துகொண்டார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் இந்த நிகழ்ச்சியில் அவருக்காக ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டிருந்த பிறந்தநாள் கேக்கையும் வெட்டினார் நயன்தாரா.கேக் வெட்டிய நயன்தாரா அங்கிருந்த சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். அட்வான்சாக பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார் நயன்தாரா.

The completion ceremony of the shooting of 'Velaikkaran' held yesterday, Nayantara also participated in it. Nayantara cut the birthday cake that were brought up for her.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS