நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வருவார் என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான வளர்ச்சி திட்ட வரைபடங்களை அஜித் தயார் செய்திருப்பதாகவும் அவர் கூறினார். தமிழக அரசியலில் நடிகர்கள் தலையீடு என்பது புதிதல்ல. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பலருக்கும் அரசியலில் குதிக்கும் ஆசை மேலோங்கி வருகிறது. ஏற்கனவே தமிழக அரசியல் ரேசில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் உள்ளனர். இதில் போர் வரும் பார்த்துக்கொள்ளலாம் என ரசிகர்களிடம் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
ஆனால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ள நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் மத்திய மாநில அரசு விமர்சித்து விளாசி வருகிறார். எண்ணூர் துறைமுகத்தின் கழிமுகப்பகுதியை ஆய்வு செய்து களப்பணிக்கும் பிள்ளையார் சுழி போட்டுவிட்டார் நடிகர் கமல்.
விஜய் சினிமா மூலம் அரசுகளின் திட்டங்களை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தும் அரசியலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Actor Ajith comes to politics said actor Aari in Visiri audio launch function. He said that Ajith has prepared development plans for Tamilnadu.