அரசியலில் இறங்க வேண்டிய அவசரம் இப்ப இல்லை...ரஜினிகாந்த்- வீடியோ

Oneindia Tamil 2017-11-23

Views 2.4K

அரசியலுக்கு வர வேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் ரசிகர்களை கடந்த மே மாதம் சந்தித்த போது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றார். மேலும் போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்றும் கூறியிருந்தார்.

அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவருடைய நண்பர் ராஜ்பகதூர் உறுதி செய்தார். ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அவசியம் என்ன என்பது குறித்த மாநாட்டை தமிழருவி மணியன் திருச்சியில் நடத்தினார். இந்நிலையில் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினி தனது பிறந்தநாளில் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று தகவல்கள் வந்தன. இதனால் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலயத்தில் நேற்று தனது இஷ்ட தெய்வமான ராகவேந்திரரை வணங்கினார். இதனால் அவரிடம் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற்றுக் கொண்டதாக கருதப்பட்டது. ஆனால் ரஜினி இன்று ஒரு கருத்தை கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். மந்த்ராலயத்தில் இருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசியல் பிரவேசம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு ரஜினி கூறுகையில் களத்தில் இறங்க வேண்டிய அவசரம் இல்லை. எனது பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பேன். காலா படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என்றார்.

Rajinikanth says that there is no urgency to enter into politics. He will meet his fans on his birthday.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS