அம்மா போல கொண்டை.. அம்மா போல புடவை.. சசிகலாவை ஒரு பிடி பிடித்த அதிமுக பெண் தொண்டர்!- வீடியோ

Oneindia Tamil 2017-11-23

Views 4

ஜெயலலிதா போல நடை உடை என அனைத்தையும் சசிகலா மாற்றியதை சொல்லி அதிமுக பெண் தொண்டர் ஒருவர் கிழித்துவிட்டார். இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களுக்கே சின்னம் வழங்கப்பட்டுள்ளதா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கூறியுள்ளார். அமைச்சர்களும் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது நீதி வென்று விட்டது என பேட்டிக் கொடுத்து வருகின்றனர். இரட்டை இலைச்சின்னம் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கு வழங்கப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சி தொண்டர்கள் திரண்டனர்.

அவர்கள் ஜெயலலிதா படத்தை கையில் ஏந்தியப்படி குத்தாட்டம் போட்டனர். மேலும் வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

A ADMK female worker slams Sasikala and TTV Dinakaran. ADMK workers enjoying the information about doble leaf symbol

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS