ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவனிடம் டிவி சேனல் ஒன்று கருத்து கேட்டபோது உளறிக் கொட்டினார் அவர்.
நீங்கள் போட்டியிட விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, எதிர்பாராமல் இவ்வளவு சீக்கிரமாக தேர்தலை நடத்த காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதில் பங்கேற்பது குறித்து எங்கள் கட்சியினருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்.
என்றைக்கு கடைசி தேதி என்பது தெரியவில்லை. அது தெரிந்த பிறகு (!!!!) அதற்கு முன்பாக, கட்சியினருடன் கலந்து பேசி முடிவெடுப்பேன். இதில் போட்டியிடுவதா இல்லையா என்பது பற்றி முடிவு செய்யவில்லை. போட்டியிட முடிவு செய்தால் நாங்கள் தனித்தே நிற்போம்.
உங்கள் மனைவி தீபா போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, சொன்னாரே பார்க்கலாம் ஒரு பதிலை. அதையும் பாருங்கள். "அது அவங்களைத்தான் கேட்கனும். அவங்களோட விருப்பம் அது. அவர் போட்டியிட்டால் என்னுடைய ஆதரவு தேவைப்படாது. அவர்கள் போட்டியிட்டால் அவர்கள் பேரவை சார்பிலேயே நிற்கலாம்" என்றார்.
I dont know Deepa will contest in RK Nagar by poll says her husband Madhavan.