வாய் தகராறு காரணமாக பக்கத்து வீட்டு குழந்தையை கொன்ற பெண்..வீடியோ

Oneindia Tamil 2017-11-25

Views 5

டெல்லியில் உள்ள பெண் ஒருவர் பக்கத்து வீட்டுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த வீட்டில் இருந்த குழந்தையை கொலை செய்து இருக்கிறார். கொலை செய்தது மட்டும் இல்லாமல் அவர் நாள் முழுக்க மிகவும் திறமையாக நாடகம் வேறு ஆடியிருக்கிறார்.
போலீசில் மிகவும் திறமையாக பொய் சொல்லி முதலில் தப்பி உள்ளார். தற்போது இவர் கொலை செய்தது எப்படி என வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.
போலீசார் தற்போது அந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு இதேபோல் குழந்தையை கொன்றுவிட்டு பெண் ஒருவர் நாடகமாடிய கதை நடந்தேறியது.டெல்லி உத்தம் நகரில் வசிக்கும் 30 வயது பெண் ஒருவர் தன் பக்கத்து வீட்டில் இருக்கும் குடும்பத்துடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். இந்த சண்டை நேற்று விஸ்வரூபம் எடுத்து கைகலப்பாக மாறியிருக்கிறது. இந்த சண்டையில் பக்கத்து வீட்டில் இருந்த பெண் இவரை மோசமான வார்த்தைகளில் திட்டி இருக்கிறார். இதனால் அந்த பெண் மிகவும் மனமுடைந்து போய் இருக்கிறார்.

தன்னை பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் திட்டியதை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் எப்படியாவது அந்த குடும்பத்தை பழி வாங்க வேண்டும் என்று நினைத்து உள்ளார். இதனால் பக்கத்து வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்த அவர்கள் வீட்டு குழந்தையை சாக்லேட் தருவதாக பேசி கூப்பிட்டு இருக்கிறார். குழந்தையை வீட்டுக்குள் அழைத்து வந்த அந்த பெண் அங்கேயே குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளார்.


A woman has allegedly kil her neighbour's 2 year old son to take revenge for an argument with his mother in Delhi's Uttam Nagar.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS