ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் மீண்டும் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.
இதில் அதிமுக மற்றும் தினகரன் அணி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியான திமுக இன்று வேட்பாளரை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் கட்சின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Marudhuganesh is going to contest in RK Nagar by poll behalf of DMK. DMK announced Marudhu ganesh is the candidate for RK Nagar by poll. RK Nagar by poll is on 21st of December.