மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த பள்ளி தலைமையாசிரியரை ஊர் பொது மக்களும், பெற்றோர்களும் சேர்ந்து அடித்து உதைத்து வகுப்பறையில் சிறை வைத்ததால் பரபரப்பு…
வேலூர் மாவட்டம் கம்பிகொலை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஞானசேகரன் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷங்களை செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவிக்க பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் ஒன்று கூடி தலைமை ஆசிரியரை சராமரியாக தாக்கியதுடன் வகுப்பறையில் சிறைவைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஞான சேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Des : The school headmistress, who was sexually assaulted by the students, was beaten by the public and the parents