சூர்யா, ஜோதிகாவுடன் ஊழியர்கள் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை ட்வீட் செய்த இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நெட்டிசன்ஸ் விளாசியுள்ளனர்.
சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளார். சூர்யாவை பார்த்த ஊழியர்கள் குஷியாகி அவருடனும், ஜோதிகாவுடனும் செல்ஃபி எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படங்களை இன்டிகோ நிறுவனம் ட்வீட்டியுள்ளது. வெல்கம் ஜோதிகா, சூர்யா. உங்களுக்கு சேவை செய்வதில் சூப்பர் மகிழ்ச்சி என்று ட்வீட்டியுள்ளது இன்டிகோ ஏர்லைன்ஸ். இதை பார்த்த நெட்டிசன்ஸ் கடுப்பாகிவிட்டனர். உங்களுக்கு என்ன ஆச்சு? இதை நிறுத்திவிட்டு சரியான நேரத்தில் வந்து பயணிகளுக்கு சிறப்பாக சேவை செய்யத் துவங்குங்கள். அவ்வளவு தான் என ஒருவர் கோபமாக கமெண்ட் போட்டுள்ளார். அண்மையில் டெல்லி விமான நிலையத்தில் இன்டிகோ ஊழியர்கள் பயணி ஒருவரை அடித்து உதைத்த புகைப்படத்தை ஒருவர் வெளியிட்டு தனது கோபத்தை காண்பித்துள்ளார். இன்டிகோ உங்களின் ஊழியர்களை ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிக்கு அனுப்பி வைக்கலாமே. யார் கண்டா அவர்கள் தங்கப் பதக்கம் வெல்லலாம். ஜெய் ஹிந்த் என்று ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.
Indigo airlines staff took selfie with star couple Suriya and Jyothika. Indigo tweeted the pictures saying that ,'Welcome Jyothika & Suriya_offl Super happy to have you onboard with us!'. Netizens got angry after seeing this tweet and blasted the airlines.