ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பொது தேர்தலுக்கான டிரெய்லர்- மருதுகணேஷ் பேட்டி- வீடியோ

Oneindia Tamil 2017-11-27

Views 1.9K

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக பெறும் வெற்றி வருகிற பொதுத் தேர்தலின் முன்னோட்டமாக அமையும் என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகருக்கு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட திமுக சார்பில் வேட்பாளர் மருதுகணேஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஒன் இந்தியா தமிழ் தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், முன்பு ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். தற்போது மீண்டும் நானே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன்.

அப்போது அடைந்த மகிழ்ச்சியை விட தற்போது மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன். திமுகவில் என்னை போன்ற சாதாரண தொண்டனுக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பளித்ததற்கு சந்தோஷமாக உள்ளது. என் வாழ்நாளில் கிடைத்த ஒரு பாக்கியமாக கருதுகிறேன்.



DMK Candidate MAruthu Ganesh says that R. K.Nagar election's winning is trial for coming General Elections. People wishes M.K.Stalin will become CM of TN.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS