தல தளபதியின் 'விக்ரம் வேதா 2' - வைரலாகும் வேற லெவல் எடிட்டிங் வீடியோ!

Filmibeat Tamil 2017-11-27

Views 5.6K

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய்சேதுபதி இணைந்து நடித்த படம் 'விக்ரம் வேதா'. இந்தப் படத்தில் கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வித்தியாசமான திரைக்கதை ஆக்கத்தால் வெற்றி பெற்ற இந்தப் படம் வசூலைக் குவித்தது. இந்தப் படத்தில் விக்ரம் மற்றும் வேதாவாக நடித்த மாதவன் - விஜய் சேதுபதியின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது. அப்போதே, இந்த மாதிரியான ஒரு கதையில் அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் கோகுல் வெங்கட் எனும் எடிட்டர். 'விக்ரம் வேதா' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித்தின் 'என்னை அறிந்தால்', விஜய்யின் 'தெறி' ஆகிய படங்களைக் கலந்து சூப்பராக உருவாக்கி இருக்கிறார் கோகுல் வெங்கட். அஜித், விஜய், மாதவன், விஜய் சேதுபதி என நான்குபேரும் இணைந்திருக்கும் இந்த எடிட்டட் வெர்சனுக்கு 'விக்ரம் வேதா 2' என டைட்டில் வைத்துள்ளனர். ரசிகர்கள் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.
'நாடி, நரம்பு, ரத்தம், சதையெல்லாம் எடிட்டிங் வெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இந்த மாதிரி எடிட் பண்ண முடியும்' என இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமென்ட் செய்து பாரட்டியுள்ளனர்.

Madhavan - Vijay Sethupathi starred 'Vikram Vedha' was greatly appreciated. Editor Gokul Venkat has created 'Vikram Vedha 2' by cuts of Ajith and vijay's mass scenes with 'Vikram Vedha' climax.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS