இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. கோஹ்லிக்கு இடமில்லை..வீடியோ

Oneindia Tamil 2017-11-27

Views 26.1K

இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளது. இந்த நிலையில் டிசம்பர் தொடக்கத்தில் ஒருநாள் தொடர் நடக்க இருக்கிறது. தற்போது இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது
இந்திய அணி இலங்கைக்கு எதிராக இந்த வருடத்தின் கடைசி ஒருநாள் தொடரை விளையாட இருக்கிறது. டிசம்பர் 10ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் இந்த போட்டி தொடங்க இருக்கிறது. இரண்டாவது போட்டி பஞ்சாப்பில் நடக்கும் . மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறும். மேலும் இந்த போட்டிக்கு பின் மூன்று டி-20 போட்டிகள் நடக்க இருக்கிறது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ம் தேதி முடிவடைகிறது.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே விளையாட மாட்டார் என்று தகவல்கள் வந்தது. அதேபோல் அவர் இடத்தில் விஜய் ஷங்கர் விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது கோஹ்லி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகி உள்ளது.

The indian squad for one day series against Sri Lanka has been announced. Kohli will not lead the team, since he has rested from the match. Rohith Sharma will lead the one day series against Sri Lanka.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS