மார்க் குழுமம், ஸ்பெக்ட்ரம் திரையரங்கு -வருமான வரி சோதனை!- வீடியோ

Oneindia Tamil 2017-11-28

Views 4K

பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால் மற்றும் மார்க் குழுமத்திற்கு சொந்தமான 33 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த நவம்பர் 9ம் தேதி சசிகலா குடும்பத்தினரை குறி வைத்து தமிழகம் முழுவதும் 190 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கின் ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி உள்ளிட்ட இடங்களிலும் 5 நாட்களாக சோதனை நடந்தது.

சோதனையில் சிக்கிய ஆவணங்களை வைத்து சுமார் 300 பேரை வருமான வரித்துறையினர் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், ஜாஸ் சினிமாஸில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சசிகலா குடும்பத்திடம் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலேயே சோதனை திட்டமிட்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால் மற்றும் கட்டுமான நிறுவனமான மார்க் குழுமத்திற்கு சொந்தமான சென்னையில் உள்ள 21 இடங்களில் வருமைன வரி சோதனை நடக்கிறது. இதே போன்று மதுரையிலும் 12 இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Income tax raids being conducted at 33 places in Tamilnadu which belongs to Spectrum cinemas and Marg constructions.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS