ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுகவில் மதுசூதனனா? பாலகங்காவா?- வீடியோ

Oneindia Tamil 2017-11-28

Views 10

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மதுசூதனன், முன்னாள் எம்.பி பாலகங்கா உள்ளிட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்காக அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அக்கட்சியின் ஆட்சிமன்ற குழுவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். புதிய ஆட்சிமன்ற குழு கூடி ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்வது என்றும் இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் மனுக்கள் பெறப்பட்டன.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இன்று காலை தலைமை கழகம் சென்று அங்கிருந்த நிர்வாகி மகாலிங்கத்திடம் விருப்ப மனு கொடுத்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட்டவர்.

ADMK will decide its candidate for RK Nagar by poll tomorrow. Either Madhusoodanan or Balaganga will the candidate, say party sources.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS